கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி வெற்றியீட்டியது.
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும், அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பி குழுவில் இவ் இரு பாடசாலைகளும் இடம்பிடித்துள்ளன. இந்த பாடசாலைகளுக்கு இடையிலான போட்டி, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி 1-0 என்ற கோல் கணக்கில், ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியை வீழ்த்தியது.
இன்றைய போட்டிக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி உதவி கல்வி பணிப்பாளர் எம்.ஜே.எவ்.ரிப்கா கலந்துகொண்டார்.
இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இலங்கை உதைபந்தாட்டச் சங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.