30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தில், நவீன கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் திறன்
வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாலய அதிபர் எம்.என்.மகத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் பிரதம அதிதியாக கலந்து
கொண்டார்.
வன்னிஹோப் அவுஸ்ரேலியா நிறுவனம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் அனுசரணையில் நடைபெற்ற நிகழ்வில், வன்னிஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான
பணிப்பாளர் எம்.ரி.முகமட் பாரீஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான றிவ்கா, எம்.எச்.எம்.றமீஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் முபாஸ்டீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது டிஜிட்டல் முறையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வகையில் மிகவும் பெறுமதிவாய்ந்த திறன் வகுப்பறைக்குரிய ஸ்மார்ட் போட், மடிக்கணிணி, புறஜெற்றர்
உள்ளிட்ட பொருட்கள் வித்தியாலய அதிபரிடம் வன்னிஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரி.முகமட் பாரீஸ் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles