மட்டக்களப்பு ஏறாவூர் ஜயங்கேணி பகுதியில் உள்ள புகையிரத பாதையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது

0
105

மட்டக்களப்பு ஏறாவூர் ஜயங்கேணி பகுதியில் உள்ள புகையிரத பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்
ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்க்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவுநேர கடுகதி புகையிரதத்தில் மோதி இவர் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாமென
ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவர் ஐயங்கேணி பாரதிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான
நாற்பது வயதுடைய கந்தசாமி சந்திர மோகன் என அவரது மனைவியினால்
அடையாளங்காட்டப்பட்டுள்ளது. திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டார்.
மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.