மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நாடத்திய தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வு

0
131

மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நாடத்திய தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வு ஏறாவூர்
பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது. ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
கிராத் ஒதும் இறைவணகத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வில் ‘கொகா நூலக தண்ணியக்கமாக்கல்’ நூலக சேவை செயற்பாடு வாசகர் நன்மை கருதி பிதம அதிதியானால்
வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ‘உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது’ என்ற
தொணிப் பொருளில் பிரதேச பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி
நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
சிறந்த வாசகர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பொது நூலகத்தில் கடைமையாற்றும் நூலக உத்தியோகஸ்த்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விசேட நிகழ்வாக குறித்த நூலகத்தின் வளர்சிக்கு பல்வேறு வகைகளிலும் சேவையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
செய்யித் அலிஸாஹிர் மௌலான நூலக அபிவிருத்தி குழுவினரால் பொன்னனாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌளரவிக்கப்பட்டார்.
நூலகத்தில் கடைமையாற்றி ஒய்வு பெற்றுச் சென்ற நூலகர் திருமதி விமலா சித்திரவேல், இடமாற்றம் பெற்றுச் சென்ற நூலகர் க.ருத்திரன் மற்றும்
நூலகத்தின் வளர்சிக்காக சேவையாற்றும் சனசமூக நிலைய உத்தியோகஸ்த்தர் ஏ.காருன் ஆகியோர்களும் பொன்னனாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.