மட்டக்களப்பு ஒல்லாந்தர்கோட்டையை, சுற்றுலாத் தளமாகமாற்ற ஆலோசனை!

0
104

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாத் தளமாக மாற்றுவற்கான முன்னாயத்த கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன்
தலைமையில் பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.


மட்டக்களப்புக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகமாக துறைசார் நிபுணர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், கோட்டையை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக ஆரயப்பட்டதோடு, புராதன நூதனசாலை ஒன்றை அமைத்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.


துறைசார் நிபுணர்கள் சிலர் நிகழ்நிலையூடாகவும், கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள்,அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் என பலரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.