மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில், நேற்றைய தினம் பெருமளவானவெடிபொருட்களும், ஒரு தொகை ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில், காரைக்காடு பகுதியில்,
அகழ்வுப் பணி இடம்பெற்றது.

அகழ்வுப் பணியின் போது, ரி-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் 20 ஆயிரம்; மீட்கப்பட்டதோடு,300 கண்ணி வெடிகள்;, 38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய அகழ்வுப்பணி இடம்பெற்றது
மீட்கப்பட்ட வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிஸார், நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.