‘அர்ப்பணிப்பை உரமாக்கி அடுத்தவரின் உயர்வுக்காய் கச்சிதமாகப் சேவையாற்றும் கண்ணியமிக்கோர்’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில், ஆசிரியர் தின நிகழ்வு மிகச் சிறப்பாக
இன்று நடைபெற்றது.
கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆகியோரின் ஏற்பாட்டில்
அதிபர் நவகீதா தர்மசீலன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிபர், ஆசிரியர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, பாண்ட் வாத்தியத்தோடு, விழா மண்டபத்திற்கு அழைத்து
வரும் நிகழ்வு நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றப்பட்டு, ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு, கௌரவிப்பு மற்றும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. விவேகானந்தா மகளிர் கல்லூரியிடல் மாணவி நிமலகுமார் டரிக்ஷா, அகில இலங்கை தமிழ் மொழி தின பேச்சுப் போட்;டியில், தேசிய நிலையில், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமைக்காக இன்று பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.