மட்டக்களப்பு கல்லடி டச்பார், இக்னேசியஸ் விளையாட்டு கழக உதைப்பந்தாட்ட சுற்று போட்டியின் ஆரம்ப நிகழ்வு

0
80

மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டு கழக மைதானத்தில் உதைப்பந்தாட்ட சுற்று போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.


கடந்த 44 செயற்பட்டுவரும், கழகத்தின் மூத்த உதைப்பந்தாட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையிலும் தற்போதய இளம் உதைப்பந்தாட்ட வீரர்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் இச் சுற்றுப் போட்டி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.


அணிக்கு 9 பேர் கொண்டதாக 6 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது.
மூத்த மற்றும் இளம் வீரர்கள் போட்டியில் மோதவுள்ளனர்.


சுற்றுப் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வானது, இக்னேசியஸ் விளையாட்டு கழக தலைவர் கஸ்டன் அன்றாடோ தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக புனித இன்னாசியார் ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் மற்றும் ஆன்மீக அதிதியாக அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.