மட்டக்களப்பு கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய எண்ணெய்க்காப்பு நிகழ்வு

0
105

மட்டக்களப்பு கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


ஆலய பிரதிஸ்டா மகா கும்பாபிசேக நிகழ்வுகள், கடந்த வெள்ளிக்கிழமை, ஆலய பிரதம குரு, சிவஸ்ரீ நித்தியானந்த பகீர சிவக் குருக்கள் தலைமையில்
ஆரம்பமாகியது.


விசேட யாக பூசைகள் இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது. பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம், நாளைய தினம், பிரதிஷ்ட பிரதம குரு – ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ தம்பிராசா பாலச்சந்திர குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.