மட்டக்களப்பு காத்தான்குடி காங்கேயனோடை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாயலினால் நடாத்தப்பட்டு வரும் பத்ரியா அல்குர்ஆன் மதரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா
பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்றது.
பள்ளிவாயல் நிர்வாக சபை பிரதித் தலைவர் மக்கீனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள், பிரமுகர்கள, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அல்குர்ஆனை பூரணமாக ஓதி முடித்து காத்தான்குடி அல்குர்ஆன் அபிவிருத்தி சபையினால், நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த 13 மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டதுடன், மதரஸாவில் குர்ஆனை ஓத பயிற்சிகளை வழங்கிய முல்லிமாவும் கௌரவிக்கப்பட்டார்.