மட்டக்களப்பு காத்தான்குடியில் சுகாதார முறைமைகளைப் பின்பற்றாத 11 பேர் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வழக்குத் தாக்கல்

0
135

மட்டக்களப்பு காத்தான்குடியில் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த பல சரக்குக் கடை உரிமையாளர்கள் மற்றும் உணவகங்களில்,
மருத்துவ சான்றிதழ் இல்லாமல் கடமையாற்றிய ஊழியர்கள் என 11 பேர் இரண்டு இலட்சத்து தொண்ணூராயிரம் ரூபா அபராதம் செலுத்தினர்.
சுகாதார முறைமைகளைப் பின்பற்றத் தவறிய 11 பேருக்கு எதிரான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தபோதே, அபராதத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.