மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி இப்ராஹிமிய்யா குர்ஆன் மதரசாவின் 27ஆவது பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
புனித அல்குர்ஆனை ஓதி முடித்து பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசில்கள் நினைவுச் சின்னங்கள் இதன்போது வழங்கப்பட்டது.
மதரஸாவின் தலைவர் எம் சௌகத் அலி தலைமையில்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்