மட்டக்களப்பு காத்தான்குடியில், கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சி

0
117

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மட்டக்களப்பு காத்தான்குடி அலுவலகத்தினால், 25 பயனாளிகளுக்கு கோழிக்
குஞ்சுகள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலோசனைக்கு அமைய, பயனாளியொருவருக்கு தலா 15 கோழிக் குஞ்சுகள்
வழங்கப்பட்டன.
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் காத்தான்குடி அலுவலகத்தின் பொறுப்பதிகாரியுமான டொக்டர் டி.மாஹிர் தலைமையில்
நடைபெற்ற கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு. எல் நசிர்தீன் உட்பட அதிகாரிகளும்
கலந்து கொண்டனர்