மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் சம்மேளனத்துக்கு சென்ற பாராளுமன்ற மன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு சம்மேளனத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் பொறியியலாளர் தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சம்மேளன பிரதி தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் சத்தார் சிறப்புரையை வழங்கினார்.
சம்மேளன செயலாளர் மௌலவி இல்ஹாம் பலாஹி பொருளாளர் இர்பான் உட்பட பள்ளி வாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.