மட்டக்களப்பு காத்தான்குடியில் உணவகங்களில் உணவு கையாள்பவர்களுக்கு நெருப்புக் காய்ச்சல் தடுப்பூசி இன்று ஏற்றப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணனின் ஆலோசனைக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைய காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி
டொக்டர் நசிர்தீனின் வழிகாட்டலில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பசீர் பொதுச் சுகாதார பரிசோதகர் றஹ்மத்துல்லாஹ் ஆகியோரால் புதிய காத்தான்குடி பத்ரியா
ஜூம்ஆ பள்ளி வாயல் மண்டபத்தில் வைத்து தடுப்பூசி ஏற்றப்பட்டது.
காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள் என்பவைகளில் உணவு கையாள்பவர்கள் என 150 பேருக்கு நெருப்புக் காய்ச்சல் தடுப்பு
மருந்து ஏற்றப்பட்டது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு காத்தான்குடியில், உணவகங்களில் பணியாற்றுவோருக்கு நெருப்புக் காய்ச்சல் தடுப்பூசி