மட்டக்களப்பு காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஜாமிஉஸ் சலாம் ஜும்ஆப் பள்ளிவாயல், மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷன் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு ஆகியவை இணைந்து, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கூட்டம் நடாத்தப்பட்டது.
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு வேலை திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறப்பட்டதுடன், எதிர்கால வேலை திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு, ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
காத்தான்குடிகுடி ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு, ஜனாஸாக்களை வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய வெளி ஊர்களில் இருந்து ஏற்றுவதற்கு வசதியான வாகனம் ஒன்றை பெறுவது தொடர்பாகவும், ஆராயப்பட்டது.
காத்தான்குடி ஜனாஸா நலம்புரி அமைப்பின் ஆலோசகர் அஷ்ஷெய்க் எம்.சி.எம்.ரிஸ்வான் மதனி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.