மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பகுதி நாள் கூட்டம் இன்று பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில்
நடைபெற்றது
பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், திணைக்களங்களில் இருந்து வருகை தந்த அதிகாரிகளும் தமது வேலை திட்டங்களின்
முன்னேற்றங்களையும் இங்கு சமர்ப்பித்தனர்
கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உட்பட கிராம உத்தியோகத்தர்கள்,
பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தயோகத்தர்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.