மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா, காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தனுஜா, காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா உட்பட அரச திணைக்களங்களின் அதிகாரிகள், வைத்தியர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள பொலிஸார் கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் காத்தான்குடி நகர சபை எல்லை விவகாரம், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.