மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அஹமட் பரீட் மாவத்தையில், மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதிக்கருகில் காணப்பட்ட தூண் மற்றும் சுவருடன் மோதி விபத்துச் சம்பவித்திருந்தது.
விபத்தில் காயமடைந்த மாணவன் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று, அவர்
உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில், தரம் 11 இல் கல்வி பயிலும், முஹமட் றிஹாம் என்;ற மாணவனே உயிரிழந்தவராவர்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.