மட்டக்களப்பு காத்தான்குடிஅல்-ஹிறா வித்தியாலயத்தில்கௌரவிப்பு நிகழ்வு

0
72

மட்டக்களப்பு காத்தான்குடி அல்-ஹிறா வித்தியாலயத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.பி.எம். ரபீக் தலைமையில் இன்று நடைபெற்றது.


2023 மற்றும் 2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களையும்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.