மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அனர்த்த முன்னாயத்த மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ள அனர்த்த முன்னாயத்தங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் புதிய காத்தான்குடி தோணாக் கால்வாய் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் முஹமட் சியாட், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா,
கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ஜரூப் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர்,
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.