மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களின் நிர்வாகிகளுக்கு, பள்ளிவாயல் பரிபாலணம் மற்றும் பள்ளிவாயல்களின் சொத்துக்கள் பராமரிப்பு, இலங்கை வக்பு சபை போன்றவைகள் தொடர்பான செயலமர்வொன்று இன்று நடைபெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற செயலமர்வில், பள்ளி வாயல்களுக்கான நிர்வாக தெரிவு முறை பற்றி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஏ.எல்.ஏ.அஹமட் விளக்கமளித்தார்.
பள்ளிவாயல்களின் பணிகளும் பரிபாலணமும் எனும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ரிஸ்வி மஜீதி மஸ்ஜித் கருத்துரையாற்றினார்.
‘ஒரு சன சமூக நிலையம்’ என்ற தலைப்பில் முனவ்வர் நழீமி மற்றும் வக்பு நியாய சபை, வக்பு சபை தொடர்பில் றொசான் ஆகியோர் விரிவுரைகளை
நிகழ்த்தினர். காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயசிறீதர் தலைமையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலக பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.சியாத்தின் ஏற்பாட்டில், காத்தானாகுடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அனுசரணையில் செயலமர்வு இடம்பெற்றது.