மட்டக்களப்பு காத்தான்குடியில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை!

0
70

மட்டக்களப்பு காத்தான்குடியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீப் பரவலினால் வர்த்தக நிலையத்தின் உட்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
புதிய காத்தான்குடி பௌஸி மாவத்தை வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திலேயே தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபை தீ அணைக்கும் இயந்திரம், மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் இயந்திரம் என்பன வரவழைக்கப்பட்டு பொது மக்களின் உதவியுடன்
தீ கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தீப் பரவலுக்கான காரணங்கள் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்