மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்தான முகாமொன்று இன்று, பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஜநாயக்காவின் வழிகாட்டலில்
காத்தான்குடி பொலீஸ் நிலைய சமூக பாதுகாப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜவாஹிரின் நெறிப்படுத்தலில் இரத்தானம் ஒழுங்கமைக்கப்பட்டது. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் டொக்டர் திருமதி அலீமா அப்துர் ரஹ்மான் தலைமையிலான இரத்த வங்கிப்
பிரிவினர் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர். பொலிஸார், பொதுமக்கள் என பலரும் இரத்ததானம் வழங்கினர்.