மட்டக்களப்பு காத்தான்குடியில் காணி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல பனை மரங்கள் எரிந்து நாசமாகின. காத்தான்குடி முதியோர் இல்ல வீதியிலுள்ள காணி ஒன்றிலேயே இன்று தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
காணி ஒன்றில் பரவிய தீ, அருகிலுள்ள காணிகளிலும் பரவியது.
பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தீப் பரவல் ஏற்பட்ட காணிகளுக்கு அருகில், மர ஆலை மற்றும் பாதணி உற்பத்தி நிலையம் என்பன அமைந்துள்ள நிலையில், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதால் பாரிய அசம்பாவிதங்களும், சொத்திழப்புக்களும் தடுக்கப்பட்டன.