மட்டக்களப்பு குருக்கள்மடம் விபுலானந்தர் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தீபாவளி நிகழ்வுகள் இடம்பெற்றன.

0
182

மட்டக்களப்பு குருக்கள்மடம் விபுலானந்தர் முதியோர் பராமரிப்பு இல்லத்தில், தீபாவளி விசேட பூசை வழிபாடுகள் மற்றும் புதிய வஸ்திரங்கள் வழங்கி வைக்கும்
நிகழ்வு என்பன இடம்பெற்றன.
இல்ல முகாமையாளர் கலாபூஷணம் பல்துறை வித்தகர் கா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதியோர்களுக்கு விசேட பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
லண்டனில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி தி.பெரியசாமி அனுசரணையில் நிகழ்வுகள் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.