‘சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் பாடசாலைகள் தோறும் சுற்றாடல் கழகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கழகங்களுக்கு மஞ்சள் பச்சை வர்ணங்களும் சூட்டப்படுகின்றன.
இன்று மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சுற்றாடல் முன்னோடிக் கழகத்திற்கு சின்னம் சூட்டும் நிகழ்வு அதிபர் சி.சசிதரன் தலைமையில் நடைபெற்றது.
மாணவர் சுற்றாடல் முன்னோடிக் கழகத்திற்கான பொறுப்பாசிரியை திருமதி ச.சாந்தலிங்கம் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி ஏ.நிஷாந்தன், பிரதி அதிபர்களான சண்முகநாதன், கந்தசாமி உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள்
கலந்து கொண்டனர்.
சுற்றாடல் முன்னோடிக் கழகமானது கடலிலும், தரையிலும் வசிக்கின்ற உயிரினங்கள் மற்றும் வளி,நீர், மண், மரஞ்செடி கொடிகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அனைத்தையும் பாதுகாப்பதோடு சுற்றாடலின் வனப்பினை அழிக்க காரணமாகின்ற அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் விலகி நிற்கவேண்டும் என்பதைக் கோட்பாடாகக் கொண்டுள்ளது.