மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு

0
211

மட்டக்களப்பு கோட்ட முனை விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பேரின்பராஜா
தலைமையில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் மாநாட்டில் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான செல்வராஜா ரஞ்சன், ஏரம்ப மூர்த்தி சிவநாதன், லெவல் டூ பயிற்றுவிப்பாளர் மலிங்க சொரபு லிக்கே மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

50வது ஆண்டில் சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் விளையாட்டுக் கழகத்திற்கான இணையதளம் மற்றும் விளையாட்டு கழகத்தின் கீதம் அடங்கிய இறுவெட்டு, வெளியிட்டு வைக்கப்பட்டது.
கழக வீரர்களுக்கான சீருடை மற்றும் தொப்பி என்பனவும் வைக்கப்பட்டதுடன், கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் முதற் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன.