மட்டக்களப்பு சின்ன ஊறணி மெதடிஸ்த ஆலயத்தால், விழிப்புணர்வு வீதி நாடகம்

0
65

மட்டக்களப்பு சின்ன ஊறணி மெதடிஸ்த ஆலய, பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு வீதி நாடகம்
இன்று முன்னெடுக்கப்பட்டது.

வீட்டு வன்முறைகள், இள வயது திருமணம், போதைப்பொருள் பாவனை, தற்கொலை முயற்சி, போன்றவற்றை தடுக்கும் வகையில், இவ் வீதி நாடகம் ஒழுங்கமைக்கப்பட்டது.

அருட்பணி ஜெகதாஸ் அடிகளாரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அக்கரைப்பற்று அருவி கலை அரங்க கலைஞர்கள் தமது ஆற்றுகைகளை வழங்கினர்.