மட்டக்களப்பு செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழக இரத்ததான முகாம்

0
265

மட்டக்களப்பு செட்டிப்பாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகம் வருடாந்தம் இரத்ததான முகாமை நடாத்தி வரும் நிலையில், இவ் வருடத்திற்கான
இரத்ததான முகாம் இன்று செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வேணுகோபாலராஜ் தலைமையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் கொடையாளிகளிடமிருந்து இரத்தத்தை சேகரித்தனர்.
செட்டிபாளையம் மற்றும் அயல் கிராம மக்களும் ஆர்வத்துடன் வருகை தந்து இரத்ததானம் வழங்கினர்.