மட்டக்களப்பு தாந்தாமலையில் நீர்தாங்கி கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

0
284

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய வளாகத்தில், நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கி ஆலய
பரிபாலன சபையினரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
முனைதீவைச் சேர்ந்த அமரர் வைரமுத்து நடராசாவின் நினைவாக, ஐக்கிய அமெரிக்க நடராசா அறக்கட்டளையினால்
5 மில்லியன் ரூபா செலவில் நீர்தாங்கி நிர்மாணிக்கப்பட்டது.
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு பு.நவருபன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற, பூஜை வழிபாட்டை
தொடர்ந்து, அமரர் வைரமுத்து நடராசா குடும்பத்தினரினால் நீர்தாங்கி கையளிக்கப்பட்டது.
நீர்தாங்கி கையளிக்கும் நிகழ்வில் தமிழ் நாடு சந்த் மகாசபாவின், தலைவர் ஸ்ரீ ஸ்ரீராம் சுவாமி, ஆலோசனை குழு தலைவர்
ஸ்ரீ சிவசங்கர் திருப்பாதி, ஆலோசனை குழு செயலாளர் செல்வி ஆர்த்தி திருப்பாதி,
துணைத்தலைவர் ஸ்ரீ எம் சசிகுமார், தமிழ் நாடு சந்த் மகாசபாவின் செயலாளரகளான, ஸ்ரீ பா.
சாய்குமார், ஸ்ரீபெ.ஐவகர் ரெட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் சந்த் மகாசபா தலைவர் ஸ்ரீ ஆர் ஸ்ரீPநிவாசன்,
தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபை தலைவர் எம் அருணன்,செயலாளர் எஸ் பரா,
பரிபாலனசபை. உறுப்பினர்கள், அமரர் வைரமுத்து நடராசா குடும்பத்தினர் கலந்துகொண்டனர்
நீர்த்தாங்கியை நிர்மாணித்துக்கொடுத்தமைக்காக, அமரர் வைரமுத்து நடராசா குடும்பத்தினருக்கு, தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலயம் கௌரமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.