மட்டக்களப்பு நகரில் காணும் பொங்கல் நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது

0
141

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுநூலகமும் இணைந்து நடாத்திய காணும் பொங்கல் விழா
இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் த.மலர்ச்செல்வன்,மட்டக்களப்பு பொதுநூலக நூலக நூலகர் செல்வி த.சிவராணி ஆகியோரின் இணைத்தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
காந்திபூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச.நவநீதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர் திருமதி ல.ஜெகதீஸ்பரன், வைத்திய நிபுணர் டாக்டர் முரளிதரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அதிதிகள் தமிழர்களின் பண்பாடுகள் தாங்கி அழைத்துவரப்பட்டதுடன் அறுவடைசெய்த நெற்கதிர்களும்
கொண்டுவரப்பட்டன.
நெற்கதிர்கள் கிழக்கின் பாரம்பரிய முறைப்படி அரசியாக்கப்பட்டு பொங்கல் பொங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கின் பாரம்பரியங்களை தாங்கிய வகையில் திமிலைத்தீவு கலைஞர்களினால் கூத்து அரங்கேற்றமும் செய்யப்பட்டதுடன்
பொங்கல் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.