மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் விசேட போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

0
151

நாடளாவிய ரீதியில், பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில், விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று
வரும் நிலையில், மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகணவின் பணிப்புரைக்கமைய, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்.பி.லியனகேவின்,
ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவுகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரி மானவின் ஆலோசனைக்கமைய, மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி
சதாத் தலைமையிலான பொலிஸ் அணியினர், மட்டக்களப்பு நகர் பகுதியில் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
போதை பொருள் மற்றும் மதுபாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க உதவி செய்துவரும் அரசசர்பற்ற அமைப்புக்கள் தொடர்பாக தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்
கொள்ளுவதற்கான துண்டுபிரசுரம் வழங்கும் நடவடிக்கையினையும், பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான இன்று ஆரம்பித்து
வைத்தார்.
மட்டு. தலைமையக பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத் தலைமையில், விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் பிரதான
நிகழ்வும் பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.