மட்டக்களப்பு பட்டிருப்புசெந்நெறி வித்தியாலயவிளையாட்டுப் போட்டி

0
70

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட செல்வாபுரம் செந்நெறி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் கா.பகிரதன் தலைமையில் கடந்த புதன் கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற இவ் விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக பட்டிருப்ப கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் பு.திவிதரன் கலந்துகொண்டார்.
போரதீவுக் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் உடற் கல்விக்கு பொறுப்பான வளவாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர்,கிராம ஆலயங்களி நிர்வாகத்தினர் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, பழைய மாணவர்களுக்கான அஞ்சலோட்டம்,ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் என்பன சிறப்பாக இடம்பெற்றன.
854 புள்ளிகளைப் பெற்று மருதம் இல்லம் முதலாமிடத்தையும் 820 புள்ளிகளைப் பெற்று முல்லை இல்லம் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் வழங்கி வைத்தார்.