மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

0
41

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில், வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரன்
தலைமையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு தெளிவூட்டல் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி வைஷ்ணவி, வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் ஆகியோரினால் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.