மட்டக்களப்பு பன்குடாவெளி கிராமத்திற்கான பிரதான வீதி கார்ப்பெட் வீதியாக புனரமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 85மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த 2கிலோ மீற்றர் வீதியானது புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் இணைப்புச் செயலாளர் தேவராஜன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெருளியியலாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.