மட்டக்களப்பு பாடுமீன் சதுரங்க கழக வருட ஆரம்ப நிகழ்வு, மட்டக்களப்பு சுவாமி விவேகானந்தர் முதியோர் இல்ல
பிரதான மண்டபத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்றது
பாடுமீன் சதுரங்க கழகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறார்களின் கல்வியினை மேம்படுத்துவதுடன் சிறார்களின் உடல் ஆரோக்கியத்தை
விருத்தி செய்யும் வகையில் விளையாட்டினையும் மேம்படுத்தி வருகின்றது.
வருட ஆரம்ப நிகழ்வு கழகத்தின் தலைவர் சௌத்திரி தலைமையில் இடம்பெற்றது.
அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விசேட கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஏ.ஜெயகரன் கலந்து கொண்டு
சிறப்பித்தார்
சிறார்கள் மற்றும் பெற்றோர்களின் வினோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
2023ம் ஆண்டிற்கான வருட இறுதி நிகழ்வும் இன்று ஒழுங்குபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.