மட்டக்களப்பு புன்னைக்குடா கடலில் நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கி காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

0
149

மட்டக்களப்பு புன்னைக்குடா கடலில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கிக் காணாமல் போன 15 வயதுடைய
சிறுவனின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவன் நீரில் மூழ்கிய பகுதியில் இருந்து சுடார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள களுவங்கேணிப் பகுதியில் சடலம் நேற்றிரவு
கரையொதுங்கியிருந்தது.
செங்கலடி -ஏறாவூர் எல்லை வீதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவர்.
திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.