மட்டக்களப்பு புன்னைச்சோலை கோப்ரா விளையாட்டு கழக சித்திரை விளையாட்டு விழா

0
87

மட்டக்களப்பு புன்னைச்;சோலை கோப்ரா விளையாட்டு கழக உறுப்பினர்கள், புன்னைச்சோலை கிராம பொதுமக்கள் ஒன்றிணைத்து நடாத்திய
சித்திரை விளையாட்டுப் போட்டியும், கௌரவிப்பு நிகழ்வு இன்று கோப்ரா விளையாட்டு கழக மைதானத்தில்
இடம்பெற்றது
கிராம மக்களின் ஒன்றினைப்பை மேம்படுத்தும் செயற்பாட்டில் ஒன்றாக சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலை கலாசார விளையாட்டு
நிகழ்வுகள் இடம் பெற்றன.
பிரதம அதிதியாக புன்னைச் சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தலைவர் எஸ்.ஞானப்பு கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக புன்னைச் சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பூசகர்களும், கௌரவ அதிதிகளாக புண்ணச்சோலை கிராம சேவை உத்தியோகத்தர்,சமுர்த்தி
உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தளும், விசேட அதிதிகளாக கோப்ரா விளையாட்டு கழக மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்