மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடற்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் கிராமங்கள், வீதிகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் தேங்கி நிற்பதால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள ஆற்றுவாய் வெட்டி விடப்படும் பட்சத்தில் மிக விரைவாக வெள்ள நீர் வழிந்தோடுவதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளதாக அப்பகுதி மக்களும், மீனவர்களும், விவசாயிகளும் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவரிகளிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இனங்க இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நீர்ப்பாசனப் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி ந.நாகரெத்தினம் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனைக்கமைவாக பெரியகல்லாறில் அமைந்துள்ள முகத்துவாரம பெக்கோ இயந்திரத்தின் மூலம் அழப்பட்டு வெள்ளநீர் கடலுக்கு அனுப்பும் செய்ற்பாடு முன்னெடுக்கப்பட்டது.