மட்டக்களப்பு போரதீவுப்பற்று விவேகானந்தபுரம் கிராமத்தை மாதிரிக் கிராமமாகப் பிரகடனப்படுத்தி, இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர்
ஆலயத்தின் அனுசரணையில், அகிலன் பவுண்டேசனால் உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ் உதவி வழங்கும் இரண்டாம் கட்ட செயற்பாட்டின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான
உதவிகள், பொது அமைப்புக்களுக்கான உதவிகள் வழங்கப்படடன.
வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கும், முன்னாள் பெண் போராளியொருவருக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.
இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவரும் அகிலன் பவுன்டேசனின் ஸ்தாபகருமான கோபாலகிருஸ்ணன், அகிலன் பவுன்டேசனின் இலங்கைக்காக பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் ஆகியோர் கிராம மக்களால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு போராதீவுப்பற்று விவேகானந்தபுரம் கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவிகள்