மட்டக்களப்பு மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் கண்காட்சி

0
353

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில், மாபெரும் கண்காட்சியொன்று இன்று இடம்பெற்றது.
மாணவர்களுக்கு பாடரீதியான செயற்பாடுகளுக்கு களமமைத்து கொடுக்கும் நோக்குடன் மகிழூர் சரஸ்வதி வித்தியாலயம், மகிழுர் முனை சக்தி வித்தியாலயம்,
மகிழூர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் ஒன்றிணைந்தே கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தன.


பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து கண்காட்சி
கூடத்தினை திறந்து வைத்தார்.