மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின், ஏற்பாட்டில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வு
7வது தடவையாக பிரதேச செலயக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளின் இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.
விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என இருநூறுக்கும் அதிகமானோர் குருதிக்கொடை வழங்கினர்.