மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக சர்வதேச மகளிர் தின நிகழ்வு

0
148

சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி தலைமையில் செர்வாமுனை கிராமத்தில் நிகழ்வு
இடம்பெற்றது.
சிறுவர் மகளிர் உரிமைகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்பூட்டல் ஊர்வலமும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன், பெண்கள் அமைப்புக்களும்
இணைந்து முன்னெடுத்தனர்.
நிகழ்வில் சாதனை படைத்த மாணவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகளும்
வழங்கப்பட்டது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் நிகழ்வில் கலந்து
சிறப்பித்தனர்.