கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட பணிபுரைக்கு அமைய, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்புகள் அதிகம் உள்ள பகுதியாக இனங்காணப்பட்ட, மட்டக்களப்பு இருதயபுரம்,வெட்டுக்காடு
ஆகிய பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் வழிகாட்டலின் கீழ், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கிரிசுதன் தலைமையில், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் களவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து முன்னெடுத்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபை , இராணுவ பாதுகாப்பு பிரிவு, மட்டக்களப்பு பொலிஸ், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் உதயசூரிய உட்பட உத்தியோகத்தர்கள் ,கிராம
சேவை உத்தியோகத்தர் , பொதுசுகாதார பரிசோதகர்கள,; டெங்கு ஒழிப்பு களப்பிரிவு உத்தியோகத்தர்கள் இராணுவ உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டனர்
இன்று மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் போது, டெங்கு நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட காணி
உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையுடன் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.