மட்டக்களப்பு மாவட்டபட்டதாரிகளின் போரட்டம்16வது நாளாக தொடர்கிறது

0
72

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில், 16வது நாளான இன்றைய தினம்
கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பட்டதாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.தமது தொழில் உரிமையினை உறுதிப்படுத்துமாறு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதுவரையில் தமக்கு சாதகமான எந்த பதிலும் வழங்கப்படாத நிலையில் தாங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும், பட்டதாரிகள் கவலை வெளியிட்டனர்.