மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து, ‘பொலித்தீன் அற்ற எமது நகரம், எமது சூழலை நாம் பாதுகாப்போம் ‘ எனும் கருப்பொருளுக்கு அமைவாக சிரமதானப் பணியொன்றை இன்று காலை மட்டக்களப்பு நகரில் முன்னெடுத்தது.
மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜீ.சஜீவ் தலைமையில் மட்டக்களப்பு வாவிக்கரை பூங்காவில் ஆரம்பித்து மட்டக்களப்பு புதுப்பால சந்தி முதல் கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம் வரையான பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் அகற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்கள், பிரதேச இளைஞர் கழகத்தினரும், சிரமதானத்தில் இணைந்திருந்தனர்.