மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்தினை முற்றுகையிட்டு, மட்டக்களப்பு முகத்துவாரத்தை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க வரும் சிலர் கற்பாறையில் டைனமோ வெடிக்கவைத்து மீன்பிடியில் ஈடுபடுவதனை உடனடியாக நிறுத்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுக்குமாறு
வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டைனமோ வெடிக்க வைப்பதனால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், முகத்துவாரத்தை சேர்ந்த மீனவர்களுக்கும் மீன் பிடி குறைந்து வருவதாகவும், இதனால் தங்களது பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
குறித்த விடயம் சம்பந்தமாக மீன்பிடி திணைக்கள அதிகாரி அமிர்தலிங்கத்திடம் போராட்டக்காரர்களினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.