மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்திச் சபையால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வு

0
58

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்திச் சபையால், உள்ளூர் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையின் தலைபர் லோபஸ் தலைமையில் நடைபெற்றநிலையில், அதிதிகளாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, போட்டியில் பங்கேற்கும், 5அணித் தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பில், பின்தங்கிய பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சுற்றுப் போட்டியில், முதலாவது பரிசாக ரூபா 10 இலட்சம் வழங்கப்படவுள்ளது.
5 அணிகளின் அனுசரணையாளர்களும் நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.