மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு தானம்

0
76

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு இன்றைய தினம் தானம் வழங்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற தானம் வழங்கும் நிகழ்வில், மக்களுக்கு இலைக் கஞ்சி வழங்கப்பட்டது.

பெருமளவான மக்கள் இலைக்கஞ்சியினை ஆர்வத்துடன் பருகினர். உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணனால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர்.